பாடல் 1182 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன ...... தனதான |
பொங்குங் கொடிய கூற்றனு நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர ...... வலைவீசிப் பொன்கண் டிளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டுயிர் புண்கொண் டுருகி யாட்படு ...... மயல்தீரக் கொங்கின் புசக கோத்திரி பங்கங் களையு மாய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற ...... கிரிசோண குன்றங் கதிரை பூப்பர முன்துன் றமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவ ...... தொருநாளே எங்கும் பகர மாய்க்கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெஞ்சண் டதனு வேட்டுவர் ...... சரணார விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் புவன நோற்பவை மென்குங் குமகு யாத்திரி ...... பிரியாதே எங்குங் கலுழி யார்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிட எங்குங் குருவி யோச்சிய ...... திருமானை என்றென் றவச மாய்த்தொழு தென்றும் புதிய கூட்டமொ டென்றும் பொழுது போக்கிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1182 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தந்தந், தாத்தன, உனது, மான், என்றும், தினமும், வணங்க, பெருமாளே, பொங்கும், கொடிய, கொங்கின், எங்கும், எங்குங், என்னும்