பாடல் 1176 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த ...... தனதான |
பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி பாயலி லிருத்திக் காட்டி ...... யநுராகம் பாகிதழ் கொடுத்துக் காட்டி நூல்களை விரித்துக் காட்டி பார்வைகள் புரட்டிக் காட்டி ...... யுறவாகி மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி மேல்விழு நலத்தைக் காட்டு ...... மடவார்பால் மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு மேன்மையை யெனக்குக் காட்டி ...... யருள்வாயே காலனை யுதைத்துக் காட்டி யாவியை வதைத்துக் காட்டி காரணம் விளைத்துக் காட்டி ...... யொருக்காலங் கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி காமனை யெரித்துக் காட்டி ...... தருபாலா மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில் வாலிப மிளைத்துக் காட்டி ...... அயர்வாகி மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டு வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே. |
* திருக்கடையூரில் சிவபூஜை செய்துகொண்டிருந்த மார்க்கண்டருடைய உயிரைப் பறிக்க யமன் பாசக்கயிறை வீசினான். அதனால் வெகுண்டு யமனைக் காலால் உதைத்து சிவபிரான் வதம் செய்தார் - மார்க்கண்ட புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1176 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, காட்டியும், இனிய, தனத்தத், தானன, தாத்த, காட்டில், காலால், வதம், செய்து, யமனைக், திருக்கடையூரில், கேட்டு, நூல்களை, காட்டு, நினைப்பைக், பெருமாளே, உனது