பாடல் 1175 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - ஹரிகாம்போதி
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன ...... தந்ததான |
பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள் பாஷிக்கத் தகாது பாதக ...... பஞ்சபூத பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை பாவிக்கப் பெறாது வாதனை ...... நெஞ்சமான ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி யேறிபபற் றொணாது நாடினர் ...... தங்களாலும் ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி யேறச்செச் சைநாறு தாளைவ ...... ணங்குவேனோ ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன் ஆபத்தைக் கெடாநி சாசரர் ...... தம்ப்ரகாசம் ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர ஆழிச்சக் ரவாள மாள்தரும் ...... எம்பிரானே மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதைநூபுர வாசப்பத் மபாத சேகர ...... சம்புவேதா வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல் வாசிப்பித் ததேசி காசுரர் ...... தம்பிரானே. |
* முருகன் பாண்டியன் உக்கிரவழுதியாக மதுரையில் அவதரித்தபோது கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேருவிடமிருந்து பொற்குவியலைக் கேட்க, அது தராமையால் சினந்து செண்டால் மேருவின்மீது எறிந்து பொன் பெற்றார். அச்செயல் இங்கு குறிப்பிடப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1175 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத்தத், தானன, தனான, அணிந்த, வள்ளியின், பொன், ஆபத்தைக், றொணாது, முடியாதது, நான்