பாடல் 1174 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த ...... தனதான |
பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து பலபல யோகத் திருந்து ...... மதராசன் பரிமள பாணத் தயர்ந்து பனைமட லூர்தற் கிசைந்து பரிதவி யாமெத்த நொந்து ...... மயல்கூர அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி யவர்விழி பாணத்து நெஞ்ச ...... மறைபோய்நின் றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றையுன்ற னருள்வச மோஇப்ர மந்தெ ...... ரிகிலேனே எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை யெனவொரு ஞானக் குருந்த ...... ருளமேவும் இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து இரணியன் மார்பைப் பிளந்த ...... தனியாண்மை பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த புளகப டீரக் குரும்பை ...... யுடன்மேவும் புயல்கரி வாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து புனமிசை யோடிப் புகுந்த ...... பெருமாளே. |
* மடல் எழுதுதல்:தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர்.முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1174 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, மணம், தனந்த, தானத், மிகவும், ஒப்பற்ற, தலைவியின், எழுதி, செய்த, மடல், பெருமாளே, நொந்து, ஞானக், மார்பைப், பிளந்த, இரண்டு