பாடல் 1173 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தந்ததன தானத் தாத்தன தனதனன தந்ததன தானத் தாத்தன தனதனன தந்ததன தானத் தாத்தன ...... தனதான |
பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள் அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள் பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோட்டிகள் ...... கொடிதாய பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறி தழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள் பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர் ...... ஒருகாம விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில் ம்ருகமதமி குந்தபனி நீரைத் தேக்கியெ விபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றிய ...... தமிழ்நூலின் விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள் முலைகளில்வி ழுந்துபரி தாபத் தாற்றினில் விடியளவு நைந்துருகு வேனைக் காப்பது ...... மொருநாளே உரகபணை பந்தியபி ஷேகத் தாற்றிய சகலவுல குந்தரும மோகப் பார்ப்பதி யுடனுருவு பங்குடைய நாகக் காப்பனும் ...... உறிதாவும் ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குல மகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்த்திடும் உரலொடுத வழ்ந்தநவ நீதக் கூற்றனு ...... மதிகோபக் கரவிகட வெங்கடக போலப் போர்க்கிரி கடவியபு ரந்தரனும் வேளைப் போற்றுகை கருமமென வந்துதொழ வேதப் பாற்பதி ...... பிறியாத கடவுளைமு னிந்தமர ரூரைக் காத்துயர் கரவடக்ர வுஞ்சகிரி சாயத் தோற்றெழு கடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கிய ...... பெருமாளே. |
* கெளதம முனிவரின் மனைவி அகலிகையைக் கூட எண்ணி அவர் இல்லாத சமயத்தில் இந்திரன் அவர் உருவத்தோடு அவளைச் சேர, முனிவர் சாபத்தால் இந்திரன் உடலில் ஆயிரம் பெண் குறிகள் உண்டாயின. அகலிகை கல்லாகுமாறும் சபிக்கப்பட்டாள். ராமனின் கால் அடி அந்தக் கல்லின் மேல் பட்டதும் அகலிகை மீண்டும் பெண்ணுருவம் பெற்றாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1173 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தாத்தன, தானத், தந்ததன, உடையதும், அவர், அகலிகை, இல்லாத, இந்திரன், கொண்டு, வேதப், பெருமாளே, மலர், வந்து, மேல்