பாடல் 1167 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
காபி
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6
தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த ...... தனதான |
நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி நிறைந்த வயிறுஞ் சரிந்து ...... தடியூணி நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு நினைந்த மதியுங் கலங்கி ...... மனையாள்கண் டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து உறைந்த உயிருங் கழன்று ...... விடுநாள்முன் உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து ...... மகிழ்வேனோ திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி திரண்ட சதியும் புரிந்து ...... முதுசூரன் சிரங்கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்து சினங்க ழுகொடும் பெருங்கு ...... ருதிமூழ்க அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட அடர்ந்த அயில்முன் துரந்து ...... பொருவேளே அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி அணங்கை மணமுன் புணர்ந்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1167 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்த, இருந்த, செய்து, அடைந்து, தனனந், சூரனின், முன்பு, கொண்டு, கண்டு, கணங்கள், நிறைந்த, சிறந்த, புரிந்து, ஒடுங்கி, திமிந்தி, பணிந்து, பெருமாளே