பாடல் 1168 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
மத்யமாவதி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதமி-2
தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன ...... தனதான |
நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய ...... விறலான நெடிய வேற்படை யானே ஜேஜெய எனஇ ராப்பகல் தானே நான்மிக நினது தாட்டொழு மாறே தானினி ...... யுடனேதான் தரையி னாழ்த்திரை யேழே போலெழு பிறவி மாக்கட லூடே நானுறு சவலை தீர்த்துன தாளே சூடியு ...... னடியார்வாழ் சபையி னேற்றியின் ஞானா போதமு மருளி யாட்கொளு மாறே தானது தமிய னேற்குமு னேநீ மேவுவ ...... தொருநாளே தருவி னாட்டர சாள்வான் வேணுவி னுருவ மாய்ப்பல நாளே தானுறு தவசி னாற்சிவ னீபோய் வானவர் ...... சிறைதீரச் சகல லோக்கிய மேதா னாளுறு மசுர பார்த்திப னோடே சேயவர் தமரை வேற்கொடு நீறா யேபட ...... விழமோதென் றருள ஏற்றம ரோடே போயவ ருறையு மாக்கிரி யோடே தானையு மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ...... ரடலாகி அமரில் வீட்டியும் வானோர் தானுறு சிறையை மீட்டர னார்பால் மேவிய அதிப ராக்ரம வீரா வானவர் ...... பெருமாளே. |
* சூரனை அஞ்சி இந்திரன் சீகாழிப் பதியில் மூங்கில் உருவில் தவம் செய்துவந்த குறிப்பு கந்த புராணத்தில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1168 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வெல்க, ஜேஜெய, தானா, தாத்தன, தானன, தேவர்கள், நான், சென்று, பெருமாளே, அனுபவிக்கும், தானுறு, மாறே, பிறவி, தகதிமி, வானவர், சிறையை