பாடல் 1166 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
நாதநாமக்ரியா
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனதன தத்த தந்த தானத்த தனதன தத்த தந்த தானத்த தனதன தத்த தந்த தானத்த ...... தனதான |
நரையொடு பற்க ழன்று தோல்வற்றி நடையற மெத்த நொந்து காலெய்த்து நயனமி ருட்டி நின்று கோலுற்று ...... நடைதோயா நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து நமதென மெத்த வந்த வாழ்வுற்று நடலைப டுத்து மிந்த மாயத்தை ...... நகையாதே விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் ...... வினையோடு மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன் விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு ...... வினவாதோ உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு மொளிபெற நற்ப தங்கள் போதித்து மொருபுடை பச்சை நங்கை யோடுற்று ...... முலகூடே உறுபலி பிச்சை கொண்டு போயுற்று முவரிவி டத்தை யுண்டு சாதித்து முலவிய முப்பு ரங்கள் வேவித்து ...... முறநாகம் அரையொடு கட்டி யந்த மாய்வைத்து மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து ...... மரவோடே அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த அரியய னித்தம் வந்து பூசிக்கும் அரநிம லர்க்கு நன்றி போதித்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1166 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போகவும், வந்த, தந்த, தானத்த, தனதன, தத்த, நான், பெருமாளே, விளங்கும், தமது, மேலே, போதித்த, தெரிந்த, சிறந்த, கொண்டு, நின்ற, நின்று, மெத்த, தங்கள், பச்சை, கட்டி, தகிட, வந்து