பாடல் 1163 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - அமிர்தவர்ஷணி
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35
- எடுப்பு - /4/4/4 0
நடை - தகதகிட
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தனதான |
தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந் துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின் தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் ...... பதுவாயுந் தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும் பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன் தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் ...... வசமாகித் திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின் கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன் சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் ...... அயர்வாகிச் செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன் சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ் செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் ...... கழல்தாராய் செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங் கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந் திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் ...... மகிழ்வாகிச் சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண் டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந் ...... தவமோதச் சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ் சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன் சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங் ...... கதிர்வேலா சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந் தெரிவரிய முடியினர வங்களுந் திங்களுஞ் சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1163 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, வந்து, தந்தனந், டுமுடுமுட, இந்தப், டுண்டுடுண், கண்டு, கொடிய, கொண்டு, பூண்டு, பூமியில், டன்புடன், பெருமாளே, ஒன்பது, துவாரங்களும்