பாடல் 1162 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானான தானன தானன தானன தானான தானன தானன தானன தானான தானன தானன தானன ...... தனதான |
ஞானாவி பூஷணி காரணி காரணி காமாவி மோகினி வாகினி யாமளை மாமாயி பார்வதி தேவிகு ணாதரி ...... உமையாள்தன் நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக வேதாக மேயருள் தேவர்கள் தேவந லீசாச டாபர மேசர்சர் வேசுரி ...... முருகோனே தேனார்மொ ழீவளி நாயகி நாயக வானாடு ளோர்தொழு மாமயில் வாகன சேணாளு மானின்ம னோகர மாகிய ...... மணவாளா சீர்பாத சேகர னாகவு நாயினன் மோகாவி காரவி டாய்கெட ஓடவெ சீராக வேகலை யாலுனை ஓதவும் ...... அருள்வாயே பேணார்கள் நீறதி டாஅம ணோர்களை சூராடி யேகழு மீதினி லேறிட கூனான மீனனி டேறிட கூடலில் ...... வருவோனே பேராண்மை யாளனி சாசரர் கோனிரு கூறாக வாளிதொ டூரகு நாயகன் பூவாய னாரணன் மாயனி ராகவன் ...... மருகோனே வாணாள்ப டாவரு சூரர்கள் மாளவெ சேணாடு ளோரவர் வீடதி டேறிட கோனாக வேவரு நாதகு ரூபர ...... குமரேசா வாசாம கோசர மாகிய வாசக தேசாதி யோரவர் பாதம தேதொழ பாசாவி நாசக னாகவு மேவிய ...... பெருமாளே. |
* திருப்பாதிரிப் புலியூர் என்னும் தலத்தில் பார்வதி சிவபெருமானது அருளைப் பெற பாதிரி மரத்தின் நிழலில் தவம் செய்தாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1162 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, உடைய, பார்வதி, தானான, நிழலில், ஆகிய, கணவனே, உனது, வந்த, செய்து, பாதிரி, விண்ணுலகத்தில், பெருமாளே, தேவர்கள், மோகினி, காரணி, மாகிய, னாகவு, எல்லாவற்றுக்கும், சூரர்கள், டேறிட, சிறந்த