பாடல் 1159 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன ...... தனதான |
செங்க னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள் தெண்டெ னத்துணை தாள்மேல்விழ ...... அமராடிச் சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரி யத்தினி லோடாசில திண்டி றற்றவ வாள்வீரரொ ...... டிகலாநின் றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன மந்தி பட்டிருள் மூடாவகை ...... யவிரோத அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந லன்பு வைத்தரு ளாமோர்கழ ...... லருளாதோ கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி கும்பி டத்தகு பாகீரதி ...... மதிமீது கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர குண்ட லத்தர்பி னாகாயுத ...... ருடனேயச் சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர் தங்க ளைச்சிறை மீளாயென ...... அசுரேசன் தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே. |
* சோம யாகம் = தேவர்கள் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை.இதைச் செய்தவர்கள் சோமயாஜிகள். சோமயாஜிகளும், தவ வீரர்களும் கூடப் பெண்களால் மதி மயங்குவர் என்பது கருத்து.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1159 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தத்தன, தானாதன, தந்த, உடைய, மீது, மலர், எனப்படும், சங்கு, குண்ட, ஞானோதய, பெருமாளே