பாடல் 1158 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்தத் தனதன தத்தன தனதன தத்தத் தனதன தத்தன தனதன தத்தத் தனதன தத்தன தனதன ...... தனதானத் |
சுற்றத் தவர்களு மக்களு மிதமுள சொற்குற் றரிவையும் விட்டது சலமிது சுத்தச் சலமினி சற்றிது கிடைபடு ...... மெனமாழ்கித் துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல் சுட்டக் குடமொடு சுட்டெரி கனலொடு தொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை ...... பிணமூடச் சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல் சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது தப்பிற் றவறுறு மத்திப நடையென ...... உரையாடிச் சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசை தப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழி தத்தச் சடம்விடு மப்பொழு திருசர ...... ணருள்வாயே சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல் சித்ரப் ப்ரபைபுனை பொற்பின ளிளமயில் செற்கட் சிவகதி யுத்தமி களிதர ...... முதுபேய்கள் திக்குச் செககெண தித்தரி திகுதிகு செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென ...... நடமாடுங் கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள் குட்டிக் கரிமுக னிக்கவ லமுதுசெய் கொச்சைக் கணபதி முக்கண னிளையவ ...... களமீதே குப்புற் றுடனெழு சச்சரி முழவியல் கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர் கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1158 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, செணக்ருத, தத்தத், உடையவள், தத்தன, கொஞ்ச, என்றெல்லாம், கண்டு, தொகு, உயிர், ஆகிய, நாடி, பெருமாளே, உடல், தத்தரி, செககெண, திக்குச், தப்பிற், தொக்குத், செச்செச், டொட்டரி, தரியென, டுடுடுடு, டெட்டெட், கணபதி