பாடல் 1157 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - குந்தலவராளி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2
தனன தனதனன தான தானன தனதனன தான தானன தனன தனதனன தான தானன தந்ததான |
சுருதி வெகுமுகபு ராண கோடிகள் சரியை கிரியைமக யோக மோகிகள் துரித பரசமய பேத வாதிகள் ...... என்றுமோடித் தொடர வுணரஅரி தாய தூரிய பொருளை யணுகியநு போக மானவை தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய ...... நின்ப்ரகாசங் கருதி யுருகியவி ரோதி யாயருள் பெருகு பரமசுக மாம கோததி கருணை யடியரொடு கூடியாடிம ...... கிழ்ந்துநீபக் கனக மணிவயிர நூபு ராரிய கிரண சரண அபி ராம கோமள கமல யுகளமற வாது பாடநி ...... னைந்திடாதோ மருது நெறுநெறென மோதி வேரோடு கருது மலகைமுலை கோதி வீதியில் மதுகை யொடுதறுக ணானை வீரிட ...... வென்றுதாளால் வலிய சகடிடறி மாய மாய்மடி படிய நடைபழகி யாயர் பாடியில் வளரு முகில்மருக வேல்வி நோதசி ...... கண்டிவீரா விருதர் நிருதர்குல சேனை சாடிய விஜய கடதடக போல வாரண விபுதை புளகதன பார பூஷண ...... அங்கிராத விமலை நகிலருண வாகு பூதர விபுத கடககிரி மேரு பூதர விகட சமரசத கோடி வானவர் ...... தம்பிரானே. |
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1157 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மார்க்கம், தகிட, சரியை, பொருளை, தனதனன, தானன, வந்த, அழகிய, யானை, ஞானம், தொழில், மேலான, இடுதல், தரும், தம்பிரானே, கோடி, பூதர, கிரியை, மார்க்கத்தில், மனம், உணர்ந்து, என்னும்