பாடல் 1156 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தந்தனந் தனந்த தந்த, தந்தனந் தனந்த தந்த தந்தனந் தனந்த தந்த ...... தனதான |
சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை சந்திரந் ததும்ப சைந்து ...... தெருவூடே சங்கினங் குலுங்க செங்கை யெங்கிலும் பணிந்து டம்பு சந்தனந் துவண்ட சைந்து ...... வருமாபோல் கொந்தளங் குலுங்க வண்சி லம்புபொங் கஇன்சு கங்கள் கொஞ்சிபொன் தொடர்ந்தி டும்பொன் ...... மடவார்தோள் கொங்கைபைங் கரம்பு ணர்ந்த ழிந்துணங் கலுந்த விர்ந்து கொஞ்சுநின் சரண்க ளண்ட ...... அருள்தாராய் தந்தனந் தசெஞ்சி லம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டையம் பதம்பு லம்ப ...... வருவோனே சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்க சண்பகம் புனங்கு றம்பொன் ...... அணைமார்பா வந்தநஞ் சுகந்த மைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை ...... யுமையீனும் மைந்தனென் றுகந்து விஞ்சு மன்பணிந் தசிந்தை யன்பர் மங்கலின் றுளம்பு குந்த ...... பெருமாளே. |
* தூதுக்கு உரிய பறவைகளுள் அன்னமும் ஒன்று.மற்றவை நாரை, வண்டு, கிளி, அன்றில், குயில், புறா.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1156 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனந், அழகிய, கொங்கை, கலந்த, தந்த, தனந்த, உடல், மகிழ்ச்சியுடன், அசைந்து, மார்பை, ஒலிக்க, சிவந்து, குலுங்க, சைந்து, சந்தனம், பொங்க, பெருமாளே, அணிந்துள்ள