பாடல் 1150 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
.....; தாளம் -
தனதன தனதன தானன தானந் தனத் தனந்தன தனன தான தனதன தானான தான தனனந் தானந் தனன தாத்தன தானத் தானத் தானத் ...... தாத்தன தனதான |
கலவியி னலமுரை யாமட வார்சந் தனத் தனங்களில் வசம தாகி யவரவர் பாதாதி கேச மளவும் பாடுங் கவிஞ னாய்த்திரி வேனைக் காமக் ரோதத் ...... தூர்த்தனை யபராதக் கபடனை வெகுபரி தாபனை நாளும் ப்ரமிக் குநெஞ்சனை உருவ மாறி முறைமுறை ஆசார வீன சமயந் தோறுங் களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச் ...... சாத்திர நெறிபோயைம் புலன்வழி யொழுகிய மோகனை மூகந் தனிற் பிறந்தொரு நொடியின் மீள அழிதரு மாதேச வாழ்வை நிலையென் றேயம் புவியின் மேற்பசு பாசத் தேபட் டேனைப் ...... பூக்கழ லிணைசேரப் பொறியிலி தனையதி பாவியை நீடுங் குணத் ரயங்களும் வரும நேக வினைகளு மாயாவி கார முழுதுஞ் சாடும் பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக் ...... காப்பது மொருநாளே குலகிரி தருமபி ராம மயூரம் ப்ரியப் படும்படி குவளை வாச மலர்கொடு வாராவு லாவி யுணரும் யோகங் குலைய வீக்கிய வேளைக் கோபித் தேறப் ...... பார்த்தரு ளியபார்வைக் குரிசிலு மொருசுரர் பூசுர னோமென் றதற் கநந்தர மிரணி யாய நமவென நாராய ணாய நமவென் றோதுங் குதலை வாய்ச்சிறி யோனுக் காகத் தூணிற் ...... றோற்றிய வசபாணிப் பலநக நுதியி னிசாசர னாகங் கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல் தோண்மாலை யாக அணியுங் கோவும் பரவி வாழ்த்திட வேகற் றாரச் சோதிப் ...... பாற்பணி யிறைவாகைப் படமுக வடலயி ராபத மேறும் ப்ரபுப் பயங்கெட வடப ராரை வரைகெட வேலேவி வாவி மகரஞ் சீறும் பரவை கூப்பிட மோதிச் சூர்கெட் டோடத் ...... தாக்கிய பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1150 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னை, கொண்டு, தனதன, கொண்ட, உடைய, தானத், சிறு, இரணியனின், பின், கற்று, மேல், வல்ல, உள்ள, பெருமாளே, சாத்திர, தாத்தன, தனத், தானந், மோதிச், பொருளின், தாக்கிய, துளசி, குவளை, அந்த