பாடல் 1151 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனத்த தானன தானான தந்தன தனத்த தானன தானான தந்தன தனத்த தானன தானான தந்தன ...... தந்ததான |
கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை சிவத்து நீடிய வாய்மீன வொண்குழை கடக்க வோடிய ஆலால நஞ்சன ...... வஞ்சநீடு கயற்க ணார்கனி வாயூற லுண்டணி கழுத்து மாகமு மேகீப வங்கொடு கலக்க மார்பக பாடீர குங்கும ...... கொங்கைமீதே உறுத்து மாரமு மோகாவ டங்களு மருத்து நேரிய கூர்வாள்ந கம்பட உடுத்த ஆடையும் வேறாயு ழன்றுக ...... ழன்றுவீழ உருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை செருக்கு மோகன வாராத ரங்களை யொழிக்க வோர்வகை காணேனு றுந்துணை ...... யொன்றுகாணேன் நிறத்த நூபுர பாதார விந்தமு முடுத்த பீலியும் வாரார்த னங்களும் நிறத்தி லேபடு வேலான கண்களும் ...... வண்டுபாட நெறித்த வோதியு மாயான்ம னம்பர தவிக்க மால்தர லாமோக லந்திட நினைக்க லாமென வேல்வேடர் கொம்புட ...... னண்புகூர்வாய் மறித்த வாரிதி கோகோவெ னும்படி வெறுத்த ராவணன் வாணாளை யம்பினில் வதைத்த மாமனு மேவார்பு ரங்கனல் ...... மண்டமேரு வளைத்த தாதையு மாறான குன்றமு மனைத்து லோகமும் வேதாக மங்களும் மதித்த சேவக வானாளு மும்பர்கள் ...... தம்பிரானே. |
* வேட்டுவ மக்கள் மயில் பீலியை ஆடையாக உடுப்பர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1151 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அணிந்த, தனத்த, தந்தன, தானன, தானான, நீண்ட, மீன், உள்ள, மயில், வேல், கூரிய, நான், வளைத்த, கண்களும், ஆடையும், கலக்க, வெறுத்த, ராவணன், தம்பிரானே, வதைத்த, உடைய