பாடல் 1146 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தான தத்தன தானன தானன தான தத்தன தானன தானன தான தத்தன தானன தானன ...... தனதான |
ஓது வித்தவர் கூலிகொ டாதவர் மாத வர்க்கதி பாதக மானவர் ஊச லிற்கன லாயெரி காளையர் ...... மறையோர்கள் ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள் ஆர்த னக்குமு தாசின தாரிகள் ஓடி யுத்தம ரூதிய நாடின ...... ரிரவோருக் கேது மித்தனை தானமி டாதவர் பூத லத்தினி லோரம தானவர் ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை ...... யிகழ்வோர்கள் ஏக சித்ததி யானமி லாதவர் மோக முற்றிடு போகித மூறினர் ஈன ரித்தனை பேர்களு மேழ்நர ...... குழல்வாரே தாத தத்தத தாதத தாதத தூது துத்துது தூதுது தூதுது சாச சச்சச சாசச சாசச ...... சசசாச தாட டட்டட டாடட டாடட டூடு டுட்டுடு டூடுடு டூடுடு தாடி டிட்டிடி டீடிடி டீடிடி ...... டிடிடீடீ தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு சேகு செக்குகு சேகுகு சேகுகு ...... செகுசேகு சேயெ னப்பல ராடிட மாகலை ஆயு முத்தமர் கூறிடும் வாசக சேகு சித்திர மாக நிணாடிய ...... பெருமாளே. |
* ஏழு நரகங்கள் பின்வருமாறு:கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).** முருகவேள் சூரனை வென்றவுடன் ஆடிய கூத்து, துடிக் கூத்து.அசுரர் படைகளை எல்லாம் வென்றபின் ஆடிய கூத்து, குடைக் கூத்து.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1146 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, சாசச, டாடட, கூத்து, தூதுது, டீடிடி, டூடுடு, தாதத, ஆடிய, தத்தன, பெருமாளே, சேகு, தோதிகு, சேகுகு, வந்து, டாதவர், பேசுபவர்கள், செய்யாதவர்கள், தீதிதி, சிறந்த, தத்தத, டட்டட, சசசாச, தூது, சச்சச, டூடு, டுட்டுடு, துத்துது, டிட்டிடி, தாடி, டிடிடீடீ