பாடல் 1147 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
.....; தாளம் -
தானன தத்தன தத்த தத்தன தானன தத்தன தத்த தத்தன தானன தத்தன தத்த தத்தன ...... தந்ததான |
ஓலைத ரித்தகு ழைக்கு மப்புற மோடிநி றத்தும தர்த்து நெய்த்தற லோதிநி ழற்குள ளிக்கு லத்துட ...... னொன்றிஞானம் ஓதிமி குத்தத வத்த வர்க்கிட ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி யூடுவி டத்தையி ருத்தி வைத்தக ...... ணம்பினாலே மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள் வாசமு லைக்குள கப்ப டுத்தியில் வாவென முற்றிந டத்தி யுட்புகு ...... மந்தமாதர் மாயம யக்கையொ ழித்து மெத்தென வானவ ருக்கரு ளுற்ற அக்ஷர வாய்மையெ னக்குமி னித்த ளித்தருள் ...... தந்திடாதோ வேலைய டைக்கஅ ரிக்கு லத்தொடு வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில் வேகமொ டப்பும லைக்கு லத்தைந ...... ளன்கைமேலே வீசஅ வற்றினை யொப்ப மிட்டணை மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட வீடண னுக்கருள் வைத்த வற்றமை ...... யன்கள்மாளக் காலயி லக்கணை தொட்ட ருட்கன மாலமை திக்கரை யிற்ற ரித்துல காளஅ ளித்தப்ர புத்வ ருட்கடல் ...... தந்தகாமன் காயமொ ழித்தவர் பெற்ற கொற்றவ நானில வித்ததி னைப்பு னத்தொரு காதல்மி குத்துமி கப்ர மித்தருள் ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1147 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, அருள், தத்த, தானன, செய்த, மேலும், திருவருள், என்னும், செய்து, பெற்ற, தம்பிரானே, கூட்டத்துடன், கொண்டு