பாடல் 1145 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்த தந்தன தந்தன தந்தன தத்த தந்தன தந்தன தந்தன தத்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான |
ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திட வெற்பெ னுங்கன கொங்கைகு ழைந்திட உற்ப லங்கள்சி வந்துக விந்திட ...... இந்த்ரகோபம் ஒத்த தொண்டைது வண்டமு தந்தர மெச்சு தும்பிக ருங்குயில் மென்புற வொக்க மென்தொனி வந்துபி றந்திட ...... அன்புகூர மிக்க சந்திர னொன்றுநி லங்களில் விக்ர மஞ்செய்தி லங்குந கம்பட மெத்த மென்பொரு ளன்பள வுந்துவ ...... ளின்பமாதர் வித்த கந்தரு விந்துத புங்குழி பட்ட ழிந்துந லங்குகு ரம்பையை விட்ட கன்றுநி னம்புய மென்பத ...... மென்றுசேர்வேன் மைக்க ருங்கட லன்றெரி மண்டிட மெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிட மற்று நன்பதி குன்றிய ழிந்திட ...... வும்பர்நாடன் வச்சி ரங்கைய ணிந்துப தம்பெற மெச்சு குஞ்சரி கொங்கைபு யம்பெற மத்த வெஞ்சின வஞ்சகர் தங்களை ...... நுங்கும்வேலா குக்கு டங்கொடி கொண்டப ரம்பர சக்ர மண்டல மெண்டிசை யம்புகழ் கொட்க கொன்றைய ணிந்தசி ரஞ்சர ...... ணங்கிகாரா கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண்புய கொற்ற வங்குற மங்கைவி ரும்பிய ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1145 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தத்த, கையில், உனது, கொண்ட, கரிய, தரித்த, தம்பிரானே, ஒத்த, மெச்சு, மிக்க, சந்திர, மார்பகங்கள்