பாடல் 1142 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...... ; தாளம் -
தானான தானன தனத்த தத்தன தானான தானன தனத்த தத்தன தானான தானன தனத்த தத்தன ...... தந்ததான |
ஊனோடு வாதுயிர் தரித்து மட்டற வூசாடு பாழ்குடி லெடுத்த திற்படி ஓயாத மாமய லுழற்றி னிற்படு ...... வம்பனேனை ஊதாரி யாய்விடு சமத்தில் நிற்பது மாராத காதலை மனத்தில் வைப்பது மூரோடு போயெதிர் பிணக்கி னிற்பது ...... முந்திடாதே தேனூறு வாய்மொழி பரத்தை யர்க்கொரு நாய்போல வேயவர் வசத்தில் நிற்பது சீர்கேட தாய்விடு சிறுப்பி ளைத்தன ...... மென்றுநீபச் சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள் சீராடி நாண்மல ரெனப்ரி யப்படு சீர்பாத போதக மநுக்ர கிப்பது ...... மெந்தநாளோ மானாக பாயலில் படுக்கை யிட்டவர் மாமேரு வாரியில் திரித்து விட்டவர் மாடோடு போய்வரு மிடைக்குலத்தவ ...... ரன்றுவாவி வாய்நாக மோலிட பிடித்த சக்கிர வாளேவி யேகர வினைத்த றித்தவர் மாமாய னாயுல களித்த வித்தகர் ...... தங்கைவாழ்வே கானாரு மாமலை தினைப்பு னத்தினில் கால்மேல்வி ழாவொரு குறச்சி றுக்கியை காணாது போயியல் புணர்ச்சி யிட்டருள் ...... கந்தவேளே காரேழு மாமலை யிடித்து ருக்கெட காராழி யேழவை கலக்கி விட்டுயர் காவான நாடர்கள் பகைச்ச வட்டிய ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1142 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெரிய, தானான, தத்தன, நிற்பது, தானன, தனத்த, ஆகிய, கொண்டு, இருந்த, எனக்கு, கலக்கி, விட்டவர், மாமலை, தம்பிரானே, நிறைந்த