பாடல் 114த - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...... ; தாளம் -
தனன தந்தன தானா தானன தனன தந்தன தானா தானன தனன தந்தன தானா தானன ...... தனதான |
உறவு சிங்கிகள் காமா காரிகள் முறைம சங்கிக ளாசா வேசிகள் உதடு கன்றிகள் நாணா வீணிகள் ...... நகரேகை உடைய கொங்கையின் மீதே தூசிகள் பிணமெ னும்படி பேய்நீ ராகிய உணவை யுண்டுடை சோர்கோ மாளிகள் ...... கடல்ஞாலத் தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள் வறுமை தந்திடு பாழ்மூ தேவிகள் அணிநெ ருங்கிக ளாசா பாஷண ...... மடமாதர் அழகு யர்ந்தபொய் மாயா ரூபிகள் கலவி யின்பமெ னாவே சோருதல் அலம லந்தடு மாறா தோர்கதி ...... யருள்வாயே பறவை யென்கிற கூடார் மூவரண் முறையி டுந்தமர் வானோர் தேரரி பகழி குன்றவி லாலே நீறெழ ...... வொருமூவர் பதநி னைந்துவி டாதே தாள் பெற அருள்பு ரிந்தபி ரானார் மாபதி பரவு கந்தசு வாமீ கானக ...... மதின்மேவுங் குறவர் தங்கள்பி ரானே மாமரம் நெறுநெ றென்றடி வேரோ டேநிலை குலைய வென்றிகொள் வேலே யேவிய ...... புயவீரா குயில்க ளன்றில்கள் கூகூ கூவென மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை குறவர் சுந்தரி யோடே கூடிய ...... பெருமாளே. |
* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 114த - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - குறவர், தந்தன, உறவு, உடைய, தானா, தானன, ஆகிய, பறக்கும், ஒப்பற்ற, கொண்டு, நெறு, சிவபெருமான், கூறி, பாவிகள், ளாசா, பெருமாளே, அணிந்தவர்கள், நான், போதும்