பாடல் 1140 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
வலஜி
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35
- எடுப்பு - /4/4/4 0
நடை - தகதகிட
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35
- எடுப்பு - /4/4/4 0
நடை - தகதகிட
தனதனன தனதனன தானான தானதன தனதனன தனதனன தானான தானதன தனதனன தனதனன தானான தானதன ...... தந்ததான |
உறவின்முறை கதறியழ ஊராரு மாசையற பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற உலகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியு ...... மந்தநாளில் உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை திரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும் உபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் ...... அந்தமார்பும் மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர் ...... வந்துகூட மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன் ...... வந்திடாயோ பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ அதிரஎழு புவியுலக மீரேழு மோலமிட பிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில் ...... நின்றநாகம் பிரியநெடு மலையிடிய மாவாரி தூளியெழ பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு பிணநிணமு முணவுசெய்து பேயோடு மாடல்செய ...... வென்றதீரா குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு குளிர்கணியி னிளமரம தேயாகி நீடியுயர் ...... குன்றுலாவி கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடைய வொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய் குமரகுரு பரஅமரர் வானாடர் பேணஅருள் ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1140 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, நீண்ட, விளங்கும், தானான, தானதன, போர், விழவும், பெரிய, ஓட்டம், யானை, அழகு, தம்பிரானே, கூடிய, நாயேனை, வந்து