பாடல் 1129 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
சுருட்டி
தாளம் - அங்கதாளம் - 9
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 9
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தத்த தத்த தத்தன தானான தான தத்த தத்த தத்தன தானான தான தத்த தத்த தத்தன ...... தனதான |
ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும் ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும் ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ...... ரழியாதே ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும் வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும் ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி ...... துலகேழும் யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ் தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும் ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் ...... இடராழி ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய நானாவி கார புற்பு தப்பி றப்பற ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் ...... மறவேனே மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர் மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி ...... லொருமூவர் மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர் தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர் வாழ்வேவ லாரி பெற்றெ டுத்த கற்பக ...... வனமேவும் தேநாய காஎ னத்து தித்த வுத்தம வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல் சேராத சூர னைத்து ணித்த டக்கிய ...... வரைமோதிச் சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெழ மாறாநி சாச ரக்கு லத்தை யிப்படி சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய ...... பெருமாளே. |
* திரிபுரம் எரிபட்டபொழுது சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில் இருவர் சிவபெருமான் கோயிலில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் சிவ நடனத்தின் போது முழவு வாத்தியம் முழக்கும் பேற்றினைப் பெற்றார் - சுந்தரர் தேவாரம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1129 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, தகிட, நான், பெரிய, தானான, தத்தன, இனிமையுடன், புகழ், என்னும், எனக்கு, சிவபெருமான், கொடுத்ததையும், டுத்த, தத்தி, மாளாது, கற்பக, போகாமல், பெருமாளே, அருளியதும்