பாடல் 1113 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்ததனா தான தத்ததனா தான தத்ததனா தான ...... தனதான |
மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு மக்களுமா றாத ...... துயர்கூர மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ வைத்தவர்தா மேக ...... மதிமாய நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு நெட்டளவாம் வாதை ...... யணுகாமுன் நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி நித்தலும்வாழ் மாறு ...... தருவாயே நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத னற்றவர்தா நாட ...... விடையேறி நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு நற்றுணைவா ஞால ...... மிகவாழப் பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக பத்தியதா மாறு ...... முகநாளும் பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே. |
மைத்துனர்களும், சிறந்த மனைவியும், தாயும், குழந்தைகளும் நீங்காத துயரம் மிக அடைய, குறைவில்லாது (நன்கு எரியும்) ஒரு நெருப்பில் இந்த உடம்பையே வேகும்படி வைத்துவிட்டு, அவரவர்களின் வீட்டுக்குச் செல்ல, அறிவு கலங்கும்படி உறுதியாக ஒரு நாளைக் குறிப்பிட்டு, (அந்த நாளில் யமன்) தனது தூதர்களை அனுப்பும், பெரும் அளவுக்குப் பட வேண்டிய வேதனைகள் என்னை நெருங்குவதற்கு முன்பாக, மனம் நெகிழ்ந்து உருகி, ஞான நிலையை அடைந்து, உனது திருவடிகளை வணங்கி நாள் தோறும் நான் வாழும் பொருட்டு அருள் புரிவாயாக. விஷம் கொண்ட பாம்பணையின் மேல் துயில் கொள்ளும் திருமால், நான்கு வேதங்களிலும் சிறந்த பிரமன், நல்ல தவசிகள் ஆகியோர்கள் தேடி நிற்க, ரிஷப வாகனத்தில் ஏறி விளங்கும் சிவபெருமானுடைய சிறப்புள்ள புதல்வனே, சூரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய நல்ல துணைவனே, உலகோர் சிறப்பாக வாழும்படி, பச்சையான ஒளி வீசும் தோகையைக் கொண்ட உடலை உடைய குதிரையாகிய மயிலைச் செலுத்தும் பாகனே, வரிசையாயுள்ள ஆறு திருமுகங்களிலும் நாள் தோறும் அன்பு மேற் கொண்டவனே, (சரவணபவ என்ற) ஆறெழுத்துக்கு உரியவனே, உலகெல்லாம் வலம் வந்த திருவடிகளை உடையவனே, உன்னைப் பக்தியுடன் போற்றிப்பணியும் தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1113 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததனா, தோறும், கொண்ட, நல்ல, நாள், திருவடிகளை, மாறு, பெருமாளே, சிறந்த