பாடல் 1112 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஹிந்தோளம்
தாளம் - ஸங்கீர்ணசாபு - 4 1/2
தகதிமிதக-3, தகிட-1 1/2
- எடுப்பு - 3/4 இடம்
தாளம் - ஸங்கீர்ணசாபு - 4 1/2
தகதிமிதக-3, தகிட-1 1/2
- எடுப்பு - 3/4 இடம்
தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த ...... தனதான |
சுட்டதுபோ லாசை விட்டுலகா சார துக்கமிலா ஞான ...... சுகமேவிச் சொற்கரணா தீத நிற்குணமூ டாடு சுத்தநிரா தார ...... வெளிகாண மொட்டலர்வா ¡£ச சக்ரசடா தார முட்டவுமீ தேறி ...... மதிமீதாய் முப்பதுமா றாறு முப்பதும்வே றான முத்திரையா மோன ...... மடைவேனோ எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ னப்பிரமா வோட ...... வரைசாய எற்றியஏ ழாழி வற்றிடமா றாய எத்தனையோ கோடி ...... யசுரேசர் பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு பத்திருதோள் வீர ...... தினைகாவல் பத்தினிதோள் தோயு முத்தமம றாது பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே. |
கையிலுள்ள ஒரு சூடான பொருளை கை எப்படி உதறுகிறதோ, அது போல ஆசைகளை நான் உதறித்தள்ளி, உலக வாழ்வில் ஏற்படும் துயரங்கள் அற்ற ஞான சுக நிலையை நான் அடைந்து, சொல்லுக்கும், மனத்திற்கும் எட்டாது நின்று, குணங்களே இல்லாத, பரிசுத்தமான, சார்பற்றதாக விளங்கும் பர வெளியை நான் கண்டு, மொட்டுக்கள் மலர்ந்த தாமரையாம் ஆறு ஆதார குண்டலினி சக்கரங்கள்* அனைத்திலும், அவற்றைக் கடந்தும் இருப்பதுவும், அமுதைப் பொழியும் சந்திரனுக்கு மேலானதும் ஆன, தொண்ணூற்றாறு** (30+36+30 = 96) தத்துவங்களுக்கும் வேறுபட்டதான அடையாள அறிகுறியாகிய மெளன நிலையை நான் அடைவேனோ? தாங்கமுடியாத வலியோடு பிரமன் கூக்குரலிட்டு ஓடவும், கிரெளஞ்ச மலையானது சாய்ந்து விழவும், அலைகள் வீசும் ஏழு கடல்கள் வற்றிவிடவும், பகைமையோடு வந்த பல கோடிக்கணக்கான அசுரர்களும், அவர்களது தலைவர்களும் அழிபடவும், ஒப்பற்ற சூரன் இறந்து படவும், பராக்கிரமம் நிறைந்த வேலைச் செலுத்திய பன்னிரு தோள் வீரா, தினைப்புனத்தைக் காவல் செய்த கற்புடை நாயகி வள்ளியின் தோள்களைத் தழுவும் உத்தமனே, நிலைத்த மனதுடன் பக்தி செய்து தொழும் தேவர்களின் பெருமாளே.
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1112 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், கரம், நான், தத்துவம், தானதத்த, தனதனன, புறநிலை, தத்துவங்கள், பெயர்களும், பெருமாளே, நிலையை, இடம், உரிய, ஐம்பூதங்கள்