பாடல் 1099 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த ...... தனதான |
மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து மதசுகப்ர தாபசித்ர ...... முலையாலே மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை மனமகிழ வேயளித்து ...... மறவாதே உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை ஒருபொழுதொ ணாதுசற்று ...... மெனவேதான் உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை யொழியவொரு போதகத்தை ...... யருள்வாயே தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம சரணயுக மாயனுக்கு ...... மருகோனே சரவணமி லேயுதித்த குமரமுரு கேசசக்ர சயிலம்வல மாய்நடத்து ...... மயில்வீரா அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும் அறுமுகவ ஞானதத்வ ...... நெறிவாழ்வே அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1099 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தானதத்த, என்னும், தாமரை, மருகோனே, பெருமாளே