பாடல் 1097 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
கரஹரப்ரியா
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த ...... தனதான |
எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து இடர்முளைக ளேமுளைத்து ...... வளர்மாயை எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து இருளிலைக ளேதழைத்து ...... மிகநீளும் இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து இடியுமுடல் மாமரத்தி ...... னருநீழல் இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு இனியதொரு போதகத்தை ...... யருள்வாயே வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற மதியிரவி தேவர்வஜ்ர ...... படையாளி மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர மறையஎதிர் வீரவுக்ரர் ...... புதல்வோனே அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு அசலமிசை வாகையிட்டு ...... வரும்வேலா அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. |
* ஆதபத்தி என்றால் குடை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1097 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், தனதனன, தானதத்த, குடை, அவர்களை, நிழல், உடைய, அழிந்து, ஆதபத்தி, பெருமாளே, தகிட, உடல்