பாடல் 1094 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதான |
குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு குமுதமிடு பரசமய ...... மொருகோடி குருடர்தெரி வரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது கொடியஇரு வினையெனும ...... ளறுபோக உதறிவித றியகரண மரணமற விரணமற வுருகியுரை பருகியநு ...... தினஞான உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத யுகளமினி யுணரஅருள் ...... புரிவாயே சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை சிறுபொறிக ளெனவுரக ...... பிலமேழுஞ் செகதலமு நிகர்சிகரி பலவுநல கெசபுயக திசையுமுட னுருகவரு ...... கடைநாளிற் கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை யெனமுடிவில் ககனமுக ...... டதிலோடுங் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1094 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, மனம், வினை, அந்தக், லோகம், இருக்கும், பெருமாளே, எழுப்புகின்ற, நான்