பாடல் 1092 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன ...... தனதான |
அனகனென அதிகனென அமலனென அசலனென அபயனென அதுலனென ...... அநபாயன் அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை மகிபஎன தினையளவு ...... ளவுமீயா மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய மனமொழிய வொருபொருளை ...... அருள்வாயே இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென இருசதுர திசையிலுர ...... கமும்வீழ இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில மெனவிமலை யமுனை யென ...... நிழல்வீசிக் ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக் கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. |
* இந்திரனுக்கு கெளதம முநிவர் இட்ட சாபத்தால் உடலெங்கும் ஆயிரம் கண்கள் தோன்றின. அது போல மயிலின் தோகையில் கண்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1092 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், தனனதன, கொண்ட, கண்கள், சென்று, உள்ள, அற்றவன், பெருமாளே