பாடல் 1090 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தாத்த தனதனன தாத்த தனதனன தாத்த ...... தனதான |
உறவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து உளமுருகு தீர்த்தி ...... வுடலூடே உடலைமுடி வாக்கு நெடியதொரு காட்டில் உயர்கனலை மூட்டி ...... விடஆவி மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி வலிவினொடு தாக்கி ...... வளையாமுன் மனமுமுனி வேட்கை மிகவுமுன தாட்கள் மகிழ்வியல்கொ டேத்த ...... மதிதாராய் பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு வரையில்மற வோர்க்கு ...... மகவாகப் பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த பிடியினடி போற்று ...... மணவாளா அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த அடர்சடையி னார்க்கு ...... மறிவீவாய் அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1090 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, உடைய, தாத்த, உடலை, பெருமாளே, காத்த, வாய்த்து, மார்த்த, மீட்ட