பாடல் 1085 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனா தத்த தனதனா தத்த தனதனா தத்த ...... தனதான |
கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளையேர் மைக்கண் ...... விழிமானார் குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள் ...... தனிலேமா முலையிலே யற்ப இடையிலே பத்ம முகநிலா வட்ட ...... மதின்மீதே முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம் ...... விடலாமோ கலையனே உக்ர முருகனே துட்டர் கலகனே மெத்த ...... இளையோனே கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை ...... மயிலோனே உலகனே முத்தி முதல்வனே சித்தி உடையனே விஷ்ணு ...... மருகோனே ஒருவனே செச்சை மருவுநேர் சித்ர வுருவனே மிக்க ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1085 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனா, தத்த, பெருமாளே, முதல்வனே, வல்லவனே, கொண்ட, பச்சை, உள்ள, முருகனே, மெத்த, வட்ட, பொட்டு, விடலாமோ, கடவுளே