பாடல் 1075 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
தர்பாரிகானடா
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தனதான |
திரிபுர மதனை யொருநொடி யதனி லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே சினமுடை யசுரர் மனமது வெருவ மயிலது முடுகி ...... விடுவோனே பருவரை யதனை யுருவிட எறியு மறுமுக முடைய ...... வடிவேலா பசலையொ டணையு மிளமுலை மகளை மதன்விடு பகழி ...... தொடலாமோ கரிதிரு முகமு மிடமுடை வயிறு முடையவர் பிறகு ...... வருவோனே கனதன முடைய குறவர்த மகளை கருணையொ டணையு ...... மணிமார்பா அரவணை துயிலு மரிதிரு மருக அவனியு முழுது ...... முடையோனே அடியவர் வினையு மமரர்கள் துயரு மறஅரு ளுதவு ...... பெருமாளே. |
இப்பாட்டு முருகனின் காதலால் விரகமுற்ற மகளுக்காக தாயார் பாடும் பாட்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1075 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தனதன, மகளை, முடைய, உடைய, அசுரர்களின், பெருமாளே, டணையு