பாடல் 1076 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தனதான |
புழுககில் களப மொளிவிடு தரள மணிபல செறிய ...... வடமேருப் பொருமிரு கலச முலையினை யரிவை புனையிடு பொதுவின் ...... மடமாதர் அழகிய குவளை விழியினு மமுத மொழியினு மவச ...... வநுராக அமளியின் மிசையி லவர்வச முருகி அழியுநி னடிமை ...... தனையாள்வாய் குழலிசை யதுகொ டறவெருள் சுரபி குறுநிரை யருளி ...... யலைமோதுங் குரைசெறி யுததி வரைதனில் விறுசு குமுகுமு குமென ...... வுலகோடு முழுமதி சுழல வரைநெறு நெறென முடுகிய முகிலின் ...... மருகோனே மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு முளரியின் முதல்வர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1076 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, பெருமாளே, மாலை, நெறு, மொகுமொகு, மருகோனே, அழகிய, குவளை, குமுகுமு