பாடல் 1059 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பாகேஸ்ரீ
தாளம் - மிஸ்ரஅட - 18 - /7/7 00
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
- முதல் லகு
தாளம் - மிஸ்ரஅட - 18 - /7/7 00
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
- முதல் லகு
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான |
கவடு கோத்தெழு முவரி மாத்திறல் காய்வேல் பாடே னாடேன் வீடா ...... னதுகூட கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ ...... தினும்வீழேன் தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர் தாழா தீயேன் வாழா தேசா ...... வதுசாலத் தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச தாவா மாறே நீதா னாதா ...... புரிவாயே சுவடு பார்த்தட வருக ராத்தலை தூளா மாறே தானா நாரா ...... யணனேநற் றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது ழாய்மார் பாகோ பாலா காவா ...... யெனவேகைக் குவடு கூப்பிட வுவண மேற்கன கோடூ தாவா னேபோ தாள்வான் ...... மருகோனே குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1059 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, நான், இல்லை, விழுந்து, பெருமாளே, காத்தருளிய, மாறே, தாத்தன, கருணை, தாவா, தகிடதகதிமி