பாடல் 1057 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன தனன தாத்தன ...... தந்ததான |
குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு குறைவி லாப்பல ...... என்பினாலுங் கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய குடிலி லேற்றுயி ...... ரென்றுகூறும் வடிவி லாப்புல மதனை நாட்டிடு மறலி யாட்பொர ...... வந்திடாமுன் மதியு மூத்துன தடிக ளேத்திட மறுவி லாப்பொருள் ...... தந்திடாதோ கடிய காட்டக முறையும் வேட்டுவர் கருதொ ணாக்கணி ...... வெங்கையாகிக் கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர் களவி னாற்புணர் ...... கந்தவேளே முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ முடிய வேற்கொடு ...... வென்றவீரா முடிய லாத்திரு வடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1057 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தன, பொருளை, செய்யும், சொல்லப்படும், தம்பிரானே, கொடிய, முடிய