பாடல் 1051 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
நிலவில் மார னேறூதை யசைய வீசு மாராம நிழலில் மாட மாமாளி ...... கையின்மேலாம் நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு நியதி யாக வாயார ...... வயிறார இலவி லூறு தேனூறல் பருகி யார வாமீறி யிளகி யேறு பாடீர ...... தனபாரம் எனது மார்பி லேமூழ்க இறுக மேவி மால்கூரு கினுமு னீப சீர்பாத ...... மறவேனே குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர் குழைய மாலி காநாக ...... மொடுதாவிக் குடில கோம ளாகார சடில மோலி மீதேறு குமர வேட மாதோடு ...... பிரியாது கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர் கடக வாரி தூளாக ...... அமராடுங் கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1051 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, சிறந்த, அணிந்துள்ள, அழகிய, நிரம்பவும், மேல், பெருமாளே, நிழலில், தனபாரம்