பாடல் 1050 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
தொடஅ டாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறு வாராலு ...... மெதிர்கூறத் துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக துரிய மாகி வேறாகி ...... யறிவாகி நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு மெனவு நேர்மை நூல்கூறி ...... நிறைமாயம் நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி நினைவொ டேகு மோர்நீதி ...... மொழியாதோ அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி யமர்செய் வீர ஈராறு ...... புயவேளே அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன் அரியும் வாழ வானாளு ...... மதிரேகா கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர் கருதி டார்கள் தீமூள ...... முதல்நாடுங் கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1050 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, ஆகிய, என்பதையும், வருகின்ற, உடைய, யாது, என்றும், வேதப், நேராக, பெருமாளே