பாடல் 1035 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஸிந்துபைரவி
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தானந் தனதன தானந் தனதன தானந் தனதன ...... தனதான |
ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி யூருங் கருவழி ...... யொருகோடி ஓதும் பலகலை கீதஞ் சகலமு மோரும் படியுன ...... தருள்பாடி நானுன் திருவடி பேணும் படியிரு போதுங் கருணையில் ...... மறவாதுன் நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி நாடும் படியருள் ...... புரிவாயே கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு காலங் களுநடை ...... யுடையோனுங் காருங் கடல்வரை நீருந் தருகயி லாயன் கழல்தொழு ...... மிமையோரும் வானிந் திரனெடு மாலும் பிரமனும் வாழும் படிவிடும் ...... வடிவேலா மாயம் பலபுரி சூரன் பொடிபட வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே. |
மாமிசமும் சதையும் கூடிய இந்த உடல் தன்னுடன் ஒன்பது துவாரங்கள்* சேர்ந்துவரும் கருவின் வழி ஒரு கோடிக் கணக்கானது. (அந்தப் பிறவித் துயரம் ஒழிய) நான் படிக்கின்ற சாத்திர நூல்களையும், இசை ஞானத்தையும் மற்ற எல்லா கற்கவேண்டியவையும் யான் உணரும்படியாக உன்னுடைய திருவருளைத் துதித்துப் பாடி, யான் உன்னுடைய திருவடிகளை விரும்பிப் போற்றும்படி காலை மாலை இரண்டு வேளைகளிலும் உன் கருணைத்திறத்தில் ஞாபகம் வைத்து, உன் திருநாமங்களைப் போற்றுவோரின் பாதங்களைத் தொழ இனியேனும் யான் விரும்பும்வண்ணம் நீ திருவருள் புரிவாயாக. காட்டிலும் கூட தன் கதிர்களை வீசும் சூரியனும், சந்திரனும், இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலங்களும், காற்றும், மேகமும், கடலும், மலையும், நீரும் - இவைகளையெல்லாம் படைத்த கைலாயநாதனாகிய சிவபிரானின் பாதங்களைப் பணியும் தேவர்களும், தேவநாட்டு இந்திரன், தெடிய திருமால், பிரமன் ஆகியோரும் வாழும்படியாகச் செலுத்திய கூரிய வேலாயுதனே, பல மாயங்களைப் புரிந்த சூரன் தூள்பட்டு அழியும்படி வாள் கொண்டு போர்புரிந்த பெருமாளே.
* ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1035 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானந், யான், துவாரங்கள், தனதன, உன்னுடைய, பெருமாளே, சூரன், ஒன்பது