பாடல் 1030 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஹிந்தோளம்
தாளம் - அங்கதாளம் - 10 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தாளம் - அங்கதாளம் - 10 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தான தான தானான தானத் ...... தனதான |
பேர வாவ றாவாய்மை பேசற் ...... கறியாமே பேதை மாத ராரோடு கூடிப் ...... பிணிமேவா ஆர வார மாறாத நூல்கற் ...... றடிநாயேன் ஆவி சாவி யாகாமல் நீசற் ...... றருள்வாயே சூர சூர சூராதி சூரர்க் ...... கெளிவாயா தோகை யாகு மாரா கிராதக் ...... கொடிகேள்வா தீர தீர தீராதி தீரப் ...... பெரியோனே தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே. |
பேராசை நீங்காத நிலையில் இருந்து, உண்மை பேசுதற்குத் தெரியாமல், அறிவீனர்களாகிய பெண்களுடன் நான் சேர்ந்து, நோய்களை அடைந்து, ஆடம்பரம் நீங்காத சமயக் கூச்சலுக்கு இடம்தரும் நூல்களைப் படித்து அடிமை நாயான எனது உயிர் வீண் படாமல் நீ சிறிது அருள் புரிவாயாக. சூரர்களுக்குச் சூரனான சூரபத்மன் முதலியோருக்கு எளிதாகக் காட்சி கொடுத்தவனே, மயில் வாகனனே, குமாரமூர்த்தியே, வேடர் குலக்கொடியாம் வள்ளியின் கணவனே, மகா தீரம் உடையோய், ¨தரியமாதி மேம்பட்ட குணங்களில் உறுதி வாய்ந்த பெரியோனே, தேவதேவனே, தேவாதிதேவர்களுக்கெல்லாம் பெருமாளாய் விளங்குபவனே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1030 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நீங்காத, பெரியோனே, தகிட