பாடல் 1029 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தான தான தானான தானத் ...... தனதான |
கூறு மார வேளார வாரக் ...... கடலாலே கோப மீது மாறாத கானக் ...... குயிலாலே மாறு போலு மாதாவின் வார்மைப் ...... பகையாலே மாது போத மாலாகி வாடத் ...... தகுமோதான் ஏறு தோகை மீதேறி யாலித் ...... திடும்வீரா ஏழு லோகம் வாழ்வான சேவற் ...... கொடியோனே சீறு சூரர் நீறாக மோதிப் ...... பொரும்வேலா தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே. |
இந்தப் பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது.புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது.மாரன், கடல், குயில் கூவுதல், தாயின் வசை முதலியவை தலைவனின் பிரிவுத் துயரைக் கூட்டும் பொருள்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1029 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீது, செய்யும், தாயின், பெருமாளே, கொடியோனே, தோகை, சேவற், தேவாதி