பாடல் 1031 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தான தான தனத்தம் தான தான தனத்தம் தான தான தனத்தம் ...... தனதான |
காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங் கான யாழின் மொழிக்கும் ...... பொதுமாதர் காணொ ணாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங் காதில் நீடு குழைக்கும் ...... புதிதாய கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங் கோவை வாய முதுக்குந் ...... தணியாமல் கூரு வேனொ ருவர்க்குந் தேடொ ணாத தொரர்த்தங் கூடு மாறொ ருசற்றுங் ...... கருதாயோ பூதி பூஷ ணர்கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசி கசக்ரந் ...... தவறாதே போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண் போத ஆத ரவைக்கும் ...... புயவீரா சோதி வேலை யெடுத்தன் றோத வேலை யில்நிற்குஞ் சூத தாரு வும்வெற்பும் ...... பொருகோவே சூரர் சேனை யனைத்துந் தூளி யாக நடிக்குந் தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1031 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தம், காதில், வீசும், பெருமாளே, சாறு, வேலை