பாடல் 1028 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
சங்கராபரணம்
தாளம் - அங்கதாளம் - 10 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தாளம் - அங்கதாளம் - 10 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தான தான தானான தானத் ...... தனதான |
காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங் காசு தேடி யீயாமல் வாழப் ...... பெறுவோரும் மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ...... குருகாரும் மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே நாத ரூப மாநாத ராகத் ...... துறைவோனே நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே. |
எதிர்த்துப் பேசியும், தாக்கியும், வாதம் செய்யவல்ல நூல்களைக் கற்றவர்களும், பொருளைத் தேடிவைத்து ஒருவருக்கும் கொடாது வாழ்க்கை நடத்துபவர்களும், பார்வதிபாகன் சிவபிரானது செல்வமே என்று உன்னை நினைந்து உள்ளம் உருகாதவர்களும், தர்மநெறி மாறாத பெரும் யமதர்மபுரிக்கு புகுந்து பிறந்து புகுந்து அலைச்சல் உறுவார்கள். இசை உருவத்தோனே, மகாதேவர் சிவனின் உள்ளத்தில் வீற்றிருப்போனே, சுவர்க்க லோகம் ஆகிய பதினான்கு உலகங்களுக்கும்* உரிமைக்காரனாக விளங்குவோனே, தீமையே செய்யாத வேல் ஏந்தும் வீரனே, சேவலைக் கொடியாக உயர்த்தியவனே, தேவ தேவனே, தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளே.
* 14 உலகங்கள் பின்வருமாறு:பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் (7 மேலுலகங்கள்).அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் (7 கீழுலகங்கள்).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1028 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - புகுந்து, பெருமாளே, தேவாதி, தகிட