பாடல் 1027 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
தோதகமி குத்த பூதமருள் பக்க சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய் சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று சோகைபல குட்ட ...... மவைதீரா வாதமொடு பித்த மூலமுடன் மற்று மாயபிணி சற்று ...... மணுகாதே வாடுமெனை முத்தி நீடியப தத்தில் வாழமிக வைத்து ...... அருள்வாயே காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த கானககு றத்தி ...... மணவாளா காசினிய னைத்து மோடியள விட்ட கால்நெடிய பச்சை ...... மயில்வீரா வேதமொழி மெத்த வோதிவரு பத்தர் வேதனைத விர்க்கு ...... முருகோனே மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1027 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நோய், நோய்கள், தானதன, தத்த, என்னை, சம்பந்தமான, பெருமாளே, பித்த, வைத்து, பச்சை, நீர்