பாடல் 1026 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற தோர்தனம சைத்து ...... இளைஞோர்தம் தோள்வலிம னத்து வாள்வலியு ழக்கு தோகையர்ம யக்கி ...... லுழலாதே பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி யோடுநினை பத்தர் ...... பெருவாழ்வே பாவவினை யற்று னாமநினை புத்தி பாரிலருள் கைக்கு ...... வரவேணும் ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி ஆண்மையுட னிற்கு ...... முருகோனே ஆதியர னுக்கு வேதமொழி முற்றி யார்வம்விளை வித்த ...... அறிவோனே வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு வேளையென நிற்கும் ...... விறல்வீரா மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1026 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தத்த, வலிமையையும், கொண்டு, பெருமாளே, நிற்கும், வரவேணும், வித்த, வெட்டி