பாடல் 1023 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்த தனதனன தானத் தான தத்த தனதனன தானத் தான தத்த தனதனன தானத் தானத் ...... தனதான |
விட்ட புழுகுபனி நீர்கத் தூரி மொய்த்த பரிமளப டீரச் சேறு மிக்க முலையைவிலை கூறிக் காசுக் ...... களவேதான் மெத்த விரியுமலர் சேர்கற் பூர மெத்தை மிசைகலவி யாசைப் பாடு விற்கு மகளிர்சுரு ளோலைக் கோலக் ...... குழையோடே முட்டி யிலகுகுமிழ் தாவிக் காமன் விட்ட பகழிதனை யோடிச் சாடி மொய்க்கு மளியதனை வேலைச் சேலைக் ...... கயல்மீனை முக்கி யமனையட மீறிச் சீறு மைக்கண் விழிவலையி லேபட் டோடி முட்ட வினையன்மரு ளாகிப் போகக் ...... கடவேனோ செட்டி யெனுமொர்திரு நாமக் கார வெற்றி யயில்தொடுப்ர தாபக் கார திக்கை யுலகைவல மாகப் போகிக் ...... கணமீளுஞ் சித்ர குலகலப வாசிக் கார தத்து மகரசல கோபக் கார செச்சை புனையுமண வாளக் கோலத் ...... திருமார்பா துட்ட நிருதர்பதி சூறைக் கார செப்பு மமரர்பதி காவற் கார துப்பு முகபடக போலத் தானக் ...... களிறூரும் சொர்க்க கனதளவி நோதக் கார முத்தி விதரணவு தாரக் கார சுத்த மறவர்மகள் வேளைக் காரப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1023 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத், அழகிய, தத்த, உள்ள, கொண்டவனே, கொண்டதுமான, தனதனன, மீது, மீனையும், என்னும், அணிந்துள்ள, காவற், வேலைச், சேறு, விட்ட, கடவேனோ, செட்டி, பெருமாளே, வெற்றி, மணம்