பாடல் 1009 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன ...... தனதான |
முருகு லாவிய குழலினு நிழலினும் அருவ மாகிய இடையினு நடையினு முளரி போலுநல் விழியினு மொழியினு ...... மடமாதர் முனிவி லாநகை வலையினு நிலையினும் இறுக வாரிடு மலையெனு முலையினு முடிவி லாததொர் கொடுவிட மடுவித ...... மயலாகி நரகி லேவிழு மவலனை யசடனை வழிப டாதவொர் திருடனை மருடனை நலமி லாவக கபடனை விகடனை ...... வினையேனை நடுவி லாதன படிறுகொ ளிடறுசொ லதனில் மூழ்கிய மறவனை யிறவனை நளின மார்பத மதுபெற ஒருவழி ...... யருள்வாயே வரிய ராவினின் முடிமிசை நடமிடு பரத மாயவ னெழுபுவி யளவிடு வரதன் மாதவ னிரணிய னுடலிரு ...... பிளவாக வகிரு மாலரி திகிரிய னலையெறி தமர வாரிதி முறையிட நிசிசரன் மகுட மானவை யொருபதும் விழவொரு ...... கணையேவுங் கரிய மேனியன் மருதொடு பொருதவன் இனிய பாவல னுரையினி லொழுகிய கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடு ...... மபிராமன் கருணை நாரண னரபதி சுரபதி மருக கானக மதனிடை யுறைதரு கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய ...... பெருமாளே. |
* திருமால் சென்றது: திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்ணனுக்காக காஞ்சீபுரத்து வரதராஜப் பெருமாள் ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1009 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, என்னை, தானன, கரிய, திருமால், கொண்ட, ஆழ்வாரின், தலைவன், திருமழிசை, அணிந்த, கருணை, பெருமாளே, தாமரை, இல்லாத, ஒப்பற்ற