பாடல் 1008 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன ...... தனதான |
இலகு வேலெனு மிருவினை விழிகளும் எழுதொ ணாதெனு மிருதன கிரிகளும் இசையி னால்வசை பொசிதரு மொழிகளு ...... மெதிர்வேகொண் டெதிரி லாவதி பலமுடை யிளைஞரெ னினிய மாவினை யிருளெனும் வலைகொடு இடைவி டாதெறு நடுவனு மெனவளை ...... மடவார்தம் கலவி மால்கொடு கலைகளு மறிவொடு கருதொ ணாதென முனிவுற மருள்கொடு கரையி லாவிதி யெனுமொரு கடலிடை ...... கவிழாதே கருணை வானவர் தொழுதெழு மயிலுறை குமர கானவர் சிறுமியொ டுருகிய கமல தாளிணை கனவிலு நினைவுற ...... அருள்தாராய் பலகை யோடொரு பதுசிர மறஎறி பகழி யானர வணைமிசை துயில்தரு பரமன் மால்படி யளவிடு மரிதிரு ...... மருகோனே பழுதி லாமன முடையவர் மலர்கொடு பரவ மால்விடை மிசையுறை பவரொடு பரம ஞானமு மிதுவென வுரைசெய்த ...... பெரியோனே அலகை காளிகள் நடமிட அலைகட லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை அசுரர் மார்பக மளறது படவிடு ...... மயில்வேலா அரிய பாவல ருரைசெய அருள்புரி முருக ஆறிரு புயஇய லிசையுடன் அழகு மாண்மையு மிலகிய சரவண ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1008 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தானன, கொண்டு, நான், அருள், செலுத்திய, மலைகளும், வாய்ந்த, கொண்ட, உடைய, பெரியோனே, கருணை, சரவண, பெருமாளே, முடியாது, என்கின்ற