பாடல் 1003 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
கமல குமிளித முலைமிசை துகிலிடு விகட கெருவிக ளசடிகள் கபடிகள் கலக மிடுவிழி வலைகொடு தழுவிக ...... ளிளைஞோர்கள் கனலி லிடுமெழு கெனநகை யருளிகள் அநெக விதமொடு தனியென நடவிகள் கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் ...... தமைநாடி அமுத மொழிகொடு தவநிலை யருளிய பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை அடைவு நடைபடி பயிலவு முயலவு ...... மறியாத அசட னறிவிலி யிழிகுல னிவனென இனமு மனிதரு ளனைவரு முரைசெய அடிய னிதுபட அரிதினி யொருபொரு ...... ளருள்வாயே திமித திமிதிமி டமடம டமவென சிகர கரதல டமருக மடிபட தெனன தெனதென தெனவென நடைபட ...... முநிவோர்கள் சிவமி லுருகியு மரகர வெனவதி பரத பரிபுர மலரடி தொழஅநு தினமு நடமிடு பவரிட முறைபவள் ...... தருசேயே குமர சரவண பவதிற லுதவிய தரும நிகரொடு புலமையு மழகிய குழக குருபர னெனவொரு மயில்மிசை ...... வருவோனே குறவ ரிடுதினை வனமிசை யிதணிடை மலையு மரையொடு பசலைகொள் வளர்முலை குலவு குறமக ளழகொடு தழுவிய ...... பெருமாளே. |
* அருணகிரியாரின் தவவலிமையை உணர்ந்த அருணாசலேசுரர் தவப் பெரியார் போலத் தோன்றி, அறுமுகக் கடவுளைத் தியானிக்கவும் என்று உபதேசம் செய்தார். இதைப் பொருட்படுத்தாத அருணகிரியார் சில காலம் வீணாக்கினார். ஊரார் வசவுக்கும் உள்ளானார். பின்னர் வருந்தினார்.** தலைவர் பிரிவதால் ஏற்படும் விரக தாபத்தால் உண்டாகும் நிற வேறுபாடு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1003 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, செய்யும், விளங்கும், பெருமாளே, மீது, தழுவிய, ஒப்பற்ற, தெனதென, திமித, பெரிய, திமிதிமி, டமடம, தெனன, தரும