பாடல் 1002 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு கனியு முதுபல கனிவகை நலமிவை ...... யினிதாகக் கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற அமுது துதிகையில் மனமது களிபெற கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான குடகு வயிறினி லடைவிடு மதகரி பிறகு வருமொரு முருகசண் முகவென குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற் கொடிய நெடியன அதிவினை துயர்கொடு வறுமை சிறுமையி னலைவுட னரிவையர் குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ...... யொழியாதோ நெடிய கடலினில் முடுகியெ வரமுறு மறலி வெருவுற ரவிமதி பயமுற நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான நிசிசர் கொடுமுடி சடசட சடவென பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற ...... முளதான நடன மிடுபரி துரகத மயிலது முடுகி கடுமையி லுலகதை வலம்வரு நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும் நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை நணியெ சரவண மதில்வள ரழகிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1002 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, வந்த, நெறு, பயப்படவும், கிடு, வீசும், குமு, தாமரை, மீது, பெரிய, பெருமாளே, அமுது, சுகியன், கடலை, கருணை, திருவருள், கொடிய, குவிய, வருமொரு, மனம்