பாடல் 1001 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ..........
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
இலகி யிருகுழை கிழிகயல் விழியினு மிசையி னசைதரு மொழியினு மருவமர் இருள்செய் குழலினு மிடையினு நடையினு ...... மநுராக இனிமை தருமொரு இதழினு நகையினு மிளைய ம்ருகமத தனகுவ டழகினு மியலு மயல்கொடு துணிவது பணிவது ...... தணியாதே குலவி விரகெனு மளறிடை முழுகிய கொடிய நடலைய னடமிட வருபிணி குறுகி யிடஎம னிறுதியி லுயிரது ...... கொடுபோநாள் குனகி யழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முதுபிண மெடுமென வொருபறை குணலை யிடஅடு சுடலையில் நடவுத ...... லினிதோதான் மலையில் நிகரில தொருமலை தனையுடல் மறுகி யலமர அறவுர முடுகிய வலிய பெலமிக வுடையவ னடையவு ...... மதிகாய மவுலி யொருபது மிருபது கரமுடன் மடிய வொருசரம் விடுபவபன் மதகரி மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில் ...... மதியாதே அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய அதுல னிருபத மதுதனி லெழுபுவி யடைய அளவிட நெடுகிய அரிதிரு ...... மருகோனே அவுண ருடலம தலமர அலைகட லறவு மறுகிட வடகுவ டனகிரி யடைய இடிபொடி படஅயில் விடவல ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1001 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, போக்கி, போகும், உள்ள, யடைய, பணிவது, மடுவில், பெருமாளே